விவசாயிகளுக்கான பிஎம் கிசான் நிதியுதவி திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.3,15,614 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வீதம் மூன்று தவணைகளாக நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.4,41,209 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆழ்கடல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களைக் கண்டறியும் 'சமுத்ரா மந்தன்' திட்டத்திற்கு ரூ.84,084 கோடியும், கேலோ இந்தியா மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.36,441 கோடியும், பிரதமர் சூர்ய சரோவர் யோஜனா திட்டத்திற்கு ரூ.5,070 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சமுத்ரா மந்தன் திட்டத்தின் மூலம் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தவும், ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் கிணறுகள் தோண்டவும், உள்கட்டமைப்புகளை உருவாக்கவும் அரசு நிதி உதவி வழங்குகிறது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



