மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கேசம்பட்டியில், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மரபு விதைகள் பகிர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தென் மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதையும், மரபு விதைகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு வகையான மரபு விதைகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், நிகழ்வில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மரபு விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




