விவசாயிகளின் அறுவடைப் பணிகளை எளிதாக்கும் வகையில், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நெல் களத்துமேடு (Threshing Floor) அமைக்கும் திட்டத்திற்கு 50% அரசு மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10 மீட்டர் × 10 மீட்டர் அளவில் அமைக்கப்படும் களத்துமேட்டின் மதிப்பீட்டு செலவு ₹5.60 லட்சம் ஆகும். இதில், தகுதியான விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் நெல் மற்றும் தானியங்கள் பாதுகாப்பாக உலர்த்தப்படுவதுடன், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் குறையும். மேலும், தரமான தானியங்களை கிடைக்கச் செய்வதோடு, சுத்தமான மற்றும் நீடித்த பயன்பாட்டிற்கான வசதியும் விவசாயிகளுக்கு கிடைக்கும்.
திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம்.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




