ஆவின் நிறுவனத்திற்கு ரூ.1,825 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. பால் பவுடர் மற்றும் வெண்ணெய் கொள்முதலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தவறான நடவடிக்கைகளே இந்த நிதி நெருக்கடிக்குக் காரணம் என பால் முகவர்கள் சங்கத்தினர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர். கொள்முதல் மூலம் லாபம் ஈட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டதால் ஆவின் நிறுவனம் தற்போது சிக்கலில் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
0விருப்பங்கள்
3விருப்பமின்மைகள்


