தமிழக வேளாண் துறை அமைச்சர் ஆர். வினோத், மாநில அரசின் வேளாண் பட்ஜெட் நகலை திருமலை திருப்பதி கோயிலுக்குக் கொண்டு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, அதன் நகலை கோயிலுக்குக் கொண்டு சென்று வழிபாடு நடத்தியது இதுவே முதல் முறையாகும்.
இந்த வழிபாட்டின் போது, பட்ஜெட் நகலை கையில் ஏந்தியபடி அமைச்சர் பூஜைகளில் பங்கேற்றார். அரசின் முக்கிய ஆவணமான வேளாண் பட்ஜெட்டை, அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்வதற்கு முன்பாக திருப்பதிக்குக் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

