தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) அதிகாரப்பூர்வ மொபைல் செயலியின் முகப்புப் பக்கம் புதிய வடிவமைப்பில் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, செயலியின் நிறங்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களாக மாற்றப்பட்டுள்ளன.
செயலியின் முகப்புப் பகுதியில் முதலமைச்சர் புகைப்படம் மற்றும் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளன. பயணிகளின் வசதிக்காக பேருந்து முன்பதிவு மற்றும் பயணத் தகவல்களை எளிதாகப் பெறும் வகையில் புதிய இடைமுகம் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்

