மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் போக்கைக் கண்டித்து, ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒத்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்தே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகம் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு தனது கடமை முடிந்துவிட்டதாகக் கருதி முதலமைச்சர் மௌனம் காப்பதாகவும், விவசாயிகளிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர் இன்னும் எவ்வளவு காலம் எடுத்துக்கொள்வார் என்பதை விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
0விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்

