சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் (Chubb) நிறுவனம் தனது உலகளாவிய திறன் மையத்தையும் (GCC), ஜெர்மனியின் நோர்டெக்ஸ் (Nordex) நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தையும் தமிழகத்தில் அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் கையெழுத்திட்டார். மேலும், தென்கொரியாவின் மோட்டிவ்லிங்க் (MotiveLink) நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரூ.300 கோடி முதலீட்டில் உற்பத்தி ஆலை ஒன்றை அமைக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தின் (University of Western Australia) முதல் சர்வதேச வளாகத்தை அமைப்பதற்கான ஒப்பந்தமும் இதன்போது கையெழுத்தானது. இந்த முதலீடுகள் மூலம் சுமார் 2,920 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


