மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவை அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று புறக்கணித்தனர்.
வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்குப் பிறகு, 'தமிழ்த்தாய் வாழ்த்து' மூன்றாவது பாடலாகப் பாடப்படும் என அறிவிக்கப்பட்டதால் இந்த சர்ச்சை வெடித்தது.
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணீயம் சுந்தரனார் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே இந்த அவமதிப்பு நடந்ததாகக் கூறி அவர்கள் விழாவைப் புறக்கணித்தனர்.
இதற்கிடையே, தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு மட்டுமே மேடையில் ஆளுநர் பட்டம் வழங்குவார் என்ற அறிவிப்பால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அனைத்து மாணவர்களுக்கும் ஆளுநரே பட்டம் வழங்குவார் என நிர்வாகம் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
0விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்




