நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் தவெகவினர் கொடி மற்றும் பதாகைகள் இன்றி பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த திமுகவினர் திட்டமிட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக ஆட்களை அழைத்து வர தலா 200 மற்றும் 300 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், போராட்டத்தின் போது 'GENZ DMK' என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு இதுபோன்ற கோமாளித்தனமான செயல்களில் ஈடுபடுவதை திமுகவினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்



