ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி ஒடிசி' திரைப்படத்திற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
கிரேக்க புராணமான ஒடிசியை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் மேட் டாமன், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன், லுபிடா நியாங்கோ, சமந்தா மார்டன், ஜெண்டயா, சார்லிஸ் தெரோன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
யூனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'தி ஒடிசி' திரைப்படம் ஜூலை 17 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. படக்குழு தற்போது இந்தியாவில் விளம்பரப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும், 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்ட போதிலும், படத்தின் எந்தக் காட்சிகளும் அல்லது வசனங்களும் நீக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



