'அமரன்' திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு தேசிய விருதைப் பெறும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். விருது அறிவிப்புக்கு முன்பே சமூக வலைதளங்களில் சாய் பல்லவிக்கு ஆதரவாக பலரும் கருத்து பதிவிட்டிருந்தனர்.
ஆனால், 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. 'ஆர்டிக்கல் 370' திரைப்படத்தில் நடித்த யாமி கவுதம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். இந்த அறிவிப்பு பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன், சாய் பல்லவிக்கு விருது கிடைக்காதது குறித்து ரசிகர்கள் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்
0விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்



