அசாம் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய தனது செல்ல நாயைக் காப்பாற்ற முயன்ற 13 வயது சிறுவன் ஹிரிதி, நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். வெள்ள நீரில் நாய் அடித்துச் செல்வதைக் கண்ட சிறுவன், அதைக் காப்பாற்ற உடனடியாகத் தண்ணீரில் குதித்துள்ளார்.
நாய் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், சிறுவன் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். ஏற்கனவே வெள்ளத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், தற்போது தங்கள் ஒரே மகனையும் இழந்து தவிப்பதாகப் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
0விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்



