தமது வெள்ளரிப் பண்ணைக்காகப் பெற்ற ரூ.99 லட்சம் மானியத் தொகையை மத்திய வேளாண் துறை இணையமைச்சர் பகீரத் சவுத்ரி திருப்பிச் செலுத்தியுள்ளார். தனது அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மூலம் இந்த மானியம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மற்றொரு மத்திய வேளாண் துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர், இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார். சவுத்ரி சம்பந்தப்பட்ட வங்கியில் இந்தத் தொகையைச் செலுத்திவிட்டதாகவும், அந்தப் பணத்தை மீண்டும் தேசிய தோட்டக்கலை வாரியத்திற்கு மாற்ற வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2025-ஆம் ஆண்டு காய்கறி மற்றும் மலர் சாகுபடிக்காக 16,592 சதுர மீட்டர் பரப்பளவிலான திட்டத்திற்கு இந்த மானியம் அனுமதிக்கப்பட்டிருந்தது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



