ரயில் நிலையங்களில் தட்கல் டிக்கெட்டுகளை பயணிகள் எளிதாகப் பெறும் வகையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் புதிய டோக்கன் முறை அமலுக்கு வருகிறது. முன்பதிவு மையங்களுக்கு வரும் பயணிகளுக்கு முதலில் டோக்கன்கள் வழங்கப்படும்.
அந்த டோக்கனில் உள்ள வரிசை எண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, தடையின்றி டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படும். இந்த வசதியைப் பயன்படுத்தும் பயணிகள் ஆதார் அட்டை போன்ற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
மேலும், பெயர், வயது மற்றும் பயணம் தொடர்பான விவரங்களை முன்கூட்டியே தயாராக வைத்திருப்பது விரைவான முன்பதிவுக்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




