2025-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'பால்கன் 9' ராக்கெட்டின் ஒரு பகுதி, நிலவின் மேற்பரப்பில் மோதவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். போதிய எரிபொருள் இல்லாததால் பூமிக்குத் திரும்ப முடியாமல் புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்ட இந்த ராக்கெட் பாகம், தற்போது நிலவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்த ராக்கெட் பாகம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி, மணிக்கு சுமார் 8,750 கி.மீ. வேகத்தில் நிலவில் மோதும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலால் நிலவின் மேற்பரப்பில் பெரும் பள்ளம் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




