மாருதி சுசுகி நிறுவனம் தனது அனைத்து வகை கார்களின் விலையையும் ஆகஸ்ட் மாதம் முதல் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. உதிரிபாகங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கார்களின் விலை ரூ.30,000 வரை அதிகரிக்கப்பட உள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மாருதி சுசுகி நிறுவனம் அறிவிக்கும் இரண்டாவது விலை உயர்வு இதுவாகும்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




