குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ், தனது 5-வது ஆண்டு சர்வதேச பாஸ்போர்ட் குறியீட்டுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 125-வது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டின் ஒட்டுமொத்த தரவரிசையுடன் ஒப்பிடுகையில், இந்தியா ஒரு இடம் பின்தங்கியுள்ளது. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய பாஸ்போர்ட்டின் தரம் வெறும் இரண்டு இடங்கள் மட்டுமே முன்னேறியுள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்





